லாட்டரி விற்றவர் கைது


லாட்டரி விற்றவர் கைது
x

லாட்டரி விற்றவர் கைது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையிலான போலீசார் நேற்று காலை தக்கலை பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் நின்று ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நின்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் திருவட்டார் அருகே முதலார் பகுதியை ேசர்ந்த நெல்சன்(வயது 49) என்பதும் அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நெல்சனை கைது செய்தனர்.

1 More update

Next Story