லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

அய்யம்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டைபெரிய தைக்கால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பெரிய தைக்கால் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதன்பேரில் அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த சேதுராமன்(வயது50) மற்றும் கோபாலபுரம் முதல் தெருவை சேர்ந்த அறிவழகன்(44) ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 6 செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.Next Story