லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது


லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகில் ஒரு மூதாட்டி சந்தேகம் படும் வகையில் நின்று கொண்டு இருந்தார். அவரை அழைத்து போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த மாபுஜான் மனைவி நாகூர்அம்மா (வயது 62) என்பதும், தமிழக அரசு தடை செய்துள்ள லாட்டரி சீட்டுக்களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்று பணம் பெற்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து நாகூர் அம்மாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.4700-ஐ பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story