லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர்,

கரூர் தாந்தோணிமலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள ஒரு கடை அருகில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த வெங்கல்பட்டியை சேர்ந்த குமார் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story