லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் இங்கா்சால் மற்றும் போலீசார் வேதாரண்யம்-நாகை சாலையில் செம்போடை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாலையோரம் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தாமரைபுலத்தை சேர்ந்த செல்லபாண்டியன் (வயது 59) என்பதும், அவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story