லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசாா் கைது செய்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி பூபாலசமுத்திரபுரம் தெருவை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). இவர் நேற்று கீழப்பாவூர் பால் பண்ணை தெருவில் உள்ள ஒரு கடை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் சேவியரை கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் 1440 மற்றும் ரொக்க பணம் ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

1 More update

Next Story