போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே கப்பியறை சரல்விளை பனங்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர பிரசாத். இவருடைய மகன் பிரதீபன் (வயது 23). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகர் பகுதியைச் சேர்ந்த மேரி ரோஷினி (23) என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியான பிரதீபன், மேரி ரோஷினி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மேரிரோஷினியை பிரதீபனுடன் அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story