கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...!
கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கெங்கவல்லி,
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் பெரியசாமி. இவருடைய மகன் மணி (வயது29). இவர் ஆத்தூர் தனியார் பைனான்ஸ்சில் வேலை பார்த்து வருகிறார்.
கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகள் பாரதி(24). இவர் கெங்கவல்லி பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மணி துணிகடைக்கு துணி எடுக்க வரும் போது பாரதியுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாரதி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரமித்து உள்ளனர். இதனால் இன்று காலை இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி நடுவலூர் புத்து மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்து மணமக்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.