காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
வையம்பட்டி:
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த புதுமணியாரம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், விஜயலட்சுமி(வயது 22) என்பவரை காதலித்து, கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் நடைபெற்ற நிலையில், கணவருடன் புதுமணியாரம்பட்டியில் விஜயலட்சுமி வசித்து வந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சினையால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி விஷம் குடித்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story