காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவண்ணாமலையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா தேனிமலை பார்வதி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 36). இவரும், வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த குணசங்கரி (32) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த குணசங்கரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசங்கரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை செய்து கொண்ட குணசங்கரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story