தர்மபுரி மகளிர் போலீஸ் நிலையத்தில்கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்


தர்மபுரி மகளிர் போலீஸ் நிலையத்தில்கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:30 AM IST (Updated: 15 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி செட்டிக்கரை அருகே உள்ள பனைமரத்து கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சங்கவி (வயது 22). பி.எஸ்சி. முடித்து பி.எட் படிக்கிறார். இளப்புதோப்பு கொட்டாய் பகுதியை சேர்ந்த சேட்டு மகன் பூவரசன் (23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இந்த நிலையில் பூவரசன், சங்கவி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கடகத்தூர் கூட்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story