தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்


தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில், தெற்கு ராஜன் வாய்க்கால் கரைசாலை பிரிந்து தோப்பு தெரு பகுதிக்கு செல்கிறது. அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் இந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாறு செல்லும் இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக குடியிருப்புகளை தொட்டுக் கொண்டும், சாலையில் மிகவும் தாழ்வாக ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டும் சென்று வருகிறது. சில இடங்களில் சற்று வேகமாக கையை உயர்த்தினாலே கை மின் கம்பிகள் மீது உரசி தொட்டுவிடக்கூடிய அளவிற்கு மிக குறைந்த உயரத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

நடவடிக்கை

மேலும் லாரி போன்ற உயரம் கூடிய வாகனங்கள் செல்லும் போது மின்கம்பிகள் மீது அவை உரசும் அபாயமும் இருக்கிறது. இதனால் விவசாய பணிகளுக்கு பொருட்கள் ஏற்றி செல்வதற்கும் மிகுந்த சிரம்மமாக இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கினறனர். மேலும் இப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பு தோப்பு தெருவுக்கு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story