பருத்தியில் மகசூல் குறைவு


பருத்தியில் மகசூல் குறைவு
x

ஆலங்குளம் பகுதிகளில் பருத்தியில் மகசூல் குறைந்ததால் போதிய விலையின்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதிகளில் பருத்தியில் மகசூல் குறைந்ததால் போதிய விலையின்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பருத்தி சாகுபடி

ஆலங்குளம் அருகே உள்ள தொம்ப குளம், கொங்கன்குளம், கீழராஜகுலராமன், வி.புதூர், ரெட்டியப்பட்டி, சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், புளியடிபட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, எதிர்கோட்டை, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், இ.டி.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்போது பருத்தி வெடித்து உள்ளது. ஆதலால் ஆட்கள் மூலம் பருத்தி எடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மகசூல் குறைவு

கடந்த ஆண்டு 1 ஏக்கருக்கு 10 முதல் 11 குவிண்டால் வரை பருத்தி மகசூல் கிடைத்தது. ஆனால் இப்போது ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் வரைதான் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

அதேபோல கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரம் வரை விலை போனது. ஆதலால் இப்போது ஒரு குவிண்டால் ரூ.5,300 வரை விற்கப்படுகிறது. மகசூல், விலை குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கூறினர். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story