சீனி அவரையில் மகசூல் குறைவு


சீனி அவரையில் மகசூல் குறைவு
x

ஆலங்குளம் பகுதியில் சீனி அவரையில் மகசூல் குறைந்து உள்ளது. குவிண்டால் ரூ.12,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் சீனி அவரையில் மகசூல் குறைந்து உள்ளது. குவிண்டால் ரூ.12,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனி அவரை சாகுபடி

ஆலங்குளம் பகுதியில் தொம்பகுளம், கரிசல்குளம், அனந்தப்பநாயக்கர்பட்டி, மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீனி அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து டி.கரிசல்குளம் விவசாயி அசோக் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சீனி அவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது 100 நாள் பயிராகும். கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்தோம். இதற்கான விதைகளை சாத்தூர் அருகே உள்ள நென்மேனி கிராமத்தில் இருந்து வாங்கி வந்து ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைத்தோம்.

மகசூல் குறைந்தது

சென்ற ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 1 குவிண்டால் தான் மகசூல் கிடைத்து உள்ளது.

ஒரு குவிண்டால் ரூ.12,500-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் சீனி அவரை காய்ந்த நெத்துகளை பிடுங்கி அதில் உள்ள விதைகளை தனியாக எடுப்பதற்கு 40 கூலி ஆட்கள் ஆகிறது.

விதைகள் எடுக்கப்பட்டு கழிவுகள் ஒதுக்கப்படுகிறது. இந்த கழிவுகள் சீனி அவரை பொட்டு என அழைக்கப்படுகின்றது. இது ஆடுகளுக்கு மழை காலங்களில் சிறந்த உணவாகும். இந்த கழிவு ஒரு ஏக்கருக்கு சென்ற ஆண்டு 20 மூடை வரை வந்தது. இந்த ஆண்டு ஏக்கருக்கு 10 மூடை தான் வந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம்

ஒரு மூடை ரூ. 550-க்கு விற்பனை செய்யபடுகிறது. சீனி அவரை மகசூல் குறைந்து உள்ளதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து உள்ளோம்.

ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story