கீழசிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம்

கீழசிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் வைகாசி தேரோட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம்,
மகா மாரியம்மன் கோவில்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கீழசிந்தலவாடியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 8-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படி நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். தேரில் மலர் மாலைகள், வாழை, கரும்பு, வெற்றிலை, பழங்கள் ஆகியவற்றை கட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்து நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே நீர்மோர், பானகம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






