ஏழைகளுக்கு மதிய உணவு


ஏழைகளுக்கு மதிய உணவு
x

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்படி அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம், கோடாரங்குளம், வாகைகுளம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, பத்தமடை உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஸ் நிலையம் அருகில் ஏழைகள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 100 பேருக்கு மதியம் பிரியாணி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவந்திபுரம் இளைஞர் அணி தலைவர் சரவணகுமார், அலெக்ஸ், கணேசன், வனராஜ், மகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story