செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி


செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு அதிரடி
x

குற்றாலத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும்.

இதேபோன்று, குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டி, குமரி மாவட்டங்களிலும் செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.


Next Story