எந்திரம் விற்று பணமோசடி


எந்திரம் விற்று பணமோசடி
x

யூடியூப் மூலம் எந்திரம் விற்று பணம் மோசடி செய்த 2 பேரை கைது செய்தனர்.

மதுரை

மதுரை புதூர் டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவருக்கு யூ.டியூப் மூலம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கமல்பாண்டி (40).டி.வி.எஸ்.நகர் சந்தானம் ரோட்டை சேர்ந்தவர் வீரபத்திரன் (40) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இருவரும் தாங்கள் பல்வேறு வகையான எந்திரங்களை விற்பனை செய்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் விற்பனை செய்யும் எந்திரத்தை வாங்குபவர்களுக்கு அதற்கான வியாபார வழி முறையில் வருமானம் வருவதற்கான வழிமுறைகளையும் செய்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

அதை நம்பி செந்தில்குமார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒரு எந்திரத்தை வாங்கினார். ஆனால் அவர்கள் தெரிவித்தப்படி எந்திரம் மூலம் வருமானத்திற்கு தேவையான வழிமுறைகளை செய்து கொடுக்கவில்லை. எனவே எந்திரத்தை எடுத்து கொண்டு தனது பணத்தை திரும்ப கொடுக்குமாறு கூறியுள்ளார். அவர்களும் அந்த எந்திரத்தை திரும்ப பெற்று கொண்டு ரூ.30 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story