கருட வாகனத்தில் மாதவப் பெருமாள்
பவித்திர உற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் மாதவப் பெருமாள் எழுந்தருளினார்.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திரு கூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story