மது 15 பேர் கைது
மது 15 பேர் கைது செய்யபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததது. அதன்படி நேற்று கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மாயனூரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 35), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி (44), சிதம்பரம் (37), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ராஜா (35), குஜிலியம்பாறையை சேர்ந்த ரமேஷ்குமார் (36).
குளித்தலையை சேர்ந்த பாலு (30), தங்கதுரை (46), ரஞ்சித் (35), ரவிக்குமார் (28), சுந்தரமணி (45), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த கோபால் (57), ெரங்கநாதபுரத்தை சேர்ந்த சம்பந்தம் (40), மேட்டு மகாஜனபுரத்தை சேர்ந்த சண்முகம் (41), பில்லாபாளையத்தை சேர்ந்த ராகேஷ் சர்மா (37), சரவணன் (45) ஆகிய 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 111 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.