சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மடியேந்தும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சத்துணவு திட்டம் சீர்குலைக்கப்படுதையும், சத்துணவு ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் மடியேந்துவது போன்று சேலையை பிடித்தவாறு கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜேஸ்வரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராணி, செயலாளர் பாலசுப்பிரமணியம், இணை செயலாளர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story