காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும் - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும் - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவர், அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அரசின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கண்காணிப்பு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க உத்தரவிட்ட கோர்ட்டு, அற்ப காரணங்களுக்காக காப்பீட்டு கோரிக்கை தொகை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Next Story