"இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது" தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது  தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள அரசே யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? இனி தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைல மரம் (யூக்கலிப்டஸ் மரம்) என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும்.

ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள் மர வகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது.

தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை.

இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story