சென்னை பல்கலைக்கழகம் கோப்பையை வென்றது


சென்னை பல்கலைக்கழகம் கோப்பையை வென்றது
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:47 PM GMT)

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: சென்னை பல்கலைக்கழகம் கோப்பையை வென்றது

விழுப்புரம்

விக்கிரவாண்டி

தென்மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி வளாகத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களிலிருந்து 76 பல்கலைக்கழக மகளிர் அணிகள் பங்கேற்றன. இறுதியில் சென்னை பல்கலைக்கழகம் கோப்பையை வென்றது. அதேபோல் 2-வது இடத்தை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகமும், 3-வது இடத்தை மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும், 4-வது இடத்தை காலிகட் பல்கலைக்கழகமும் பிடித்தன. நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் டாக்டர் மகாதேவன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் டாக்டர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூர்யா பார்மசி கல்லூரி முதல்வர் டாக்டர் அன்பழகன் வரவேற்றார். சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் மணி, சூர்யா கல்வி குழும கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீனி வாசன், ராம்குமார், அருண்குமார் மற்றும் அணி பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.


Next Story