திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் ஆ.ராசா குறித்து கேள்வி எழுப்பியதால் பேட்டியை புறக்கணித்தார்


திருவெண்ணெய்நல்லூர்    கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம்    ஆ.ராசா குறித்து கேள்வி எழுப்பியதால் பேட்டியை புறக்கணித்தார்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:33+05:30)

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வருகை தந்தார். அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டியளிக்க இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது மதுரை ஆதீனத்திடம், நிருபர்கள் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாது என கூறி பேட்டியை புறக்கணித்ததோடு, அங்கிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story