கணவன்-மனைவி பிரச்சினையில் குழந்தைகளை மீட்க கோரும் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது - வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கணவன்-மனைவி பிரச்சினையில் குழந்தைகளை மீட்க கோரும் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது - வழக்கை தள்ளுபடி செய்து  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கணவன்-மனைவி பிரச்சினையில் குழந்தைகளை மீட்க கோரும் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


கணவன்-மனைவி பிரச்சினையில் குழந்தைகளை மீட்க கோரும் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புகார்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறி இருந்ததாவது:- என்னுடைய 2 குழந்தைகளை என் கணவர் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். அவர்களை என்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்தேன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மகன், மகளை மீட்டு கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- இந்த வழக்கின் மனுதாரருக்கும், எதிர்மனுதாரருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.

பரிகாரம் தேடலாம்

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் முதல் மகன் ஏற்கனவே 18 வயதை அடைந்து விட்டார். எனவே அவருக்கு இந்த வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க இயலாது. அதேபோல் மனுதாரரின் மகளுக்கு 7 வயது ஆகிறது. அவரை தனது கணவர் ஆனந்த் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டுகிறார்.

கணவன்-மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினையில் குழந்தைகளை ஒரு தரப்பினர் அழைத்துச் சென்ற விவகாரத்தை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது. எனவே மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட குடும்ப நல கோர்ட்டை அணுகி, உரிய பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story