நெடுஞ்சாலைகள் திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு-மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நெடுஞ்சாலைகள் திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு-மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நெடுஞ்சாலைகள் திருத்தச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரையைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதில் நில ஆர்ஜிதம், இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. இழப்பீடு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கலெக்டரிடம் முறையிடலாம். அதுபற்றி கலெக்டர் தரப்பில் சமரச தீர்வாளர் ஒருவரை நியமித்து நிவாரணம் பெறலாம் எனவும் நெடுஞ்சாலைகள் திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் சமரச தீர்வாளராக இருப்பவர் மத்திய அரசு அதிகாரியாகத்தான் இருப்பார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கலெக்டரின் நடவடிக்கைக்கு எதிராக நேரடியாக கோர்ட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு மறைமுகமாக தடுக்கப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்ததை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு மத்திய சட்டத்துறை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோர் தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story