பட்டாசு ஆலை விபத்து வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பட்டாசு ஆலை விபத்து வழக்கில்  சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பட்டாசு ஆலை விபத்து வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் கடந்த மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பட்டாசு ஆலை போர்மேன் தாயில்பட்டி கண்ணன், தனக்கு ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5.50 லட்சமும், காயமடைந்த 23 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வெம்பக்கோட்டை போலீசில் நாள்தோறும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story