"4 பற்களை உடைத்து கடுமையாக போலீசார் தாக்கினார்கள்" - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர், தன் வழக்கு ஆவணங்களை கேட்டு மனு- அறிக்கை தாக்கல் செய்ய அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


4 பற்களை உடைத்து கடுமையாக போலீசார் தாக்கினார்கள் - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர், தன் வழக்கு ஆவணங்களை கேட்டு மனு- அறிக்கை தாக்கல் செய்ய அம்பாசமுத்திரம் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர், தன்மீதான வழக்கு ஆவணங்களை கேட்ட மனு தொடர்பாக அம்பாசமுத்திரம் கோர்ட்டு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர், தன்மீதான வழக்கு ஆவணங்களை கேட்ட மனு தொடர்பாக அம்பாசமுத்திரம் கோர்ட்டு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பற்களை பிடுங்கிய விவகாரம்

குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர்சிங் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல் பிடுங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் போலீசார் வைத்து என்னை கடுமையாக தாக்கினார்கள். என்னுடைய 4 பற்கள் உடைக்கப்பட்டன. பிறகு என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் என் மீது பதிவான வழக்கு விவரங்களை என்னிடம் வழங்கும்படி அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தேன்.

இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திரம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து, என் மீது பதிவான குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரனைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரை போலீசார் கொடூரமாக தாக்கி, அவரின் பற்களை பிடுங்கியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. மனுதாரர் தன் மீதான வழக்கு விவரங்களை தருமாறு கேட்ட மனுவை நிராகரித்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மனு நிராகரிக்கப்பட்டதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா? என்று அம்பாசமுத்திரம் கோர்ட்டின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.


Next Story