மதுரை மெட்ரோ ெரயிலை மேலூர் வரை இயக்க வேண்டும்-மூவேந்தர் பண்பாட்டுக்கழக பேரவை தீர்மானம்


மதுரை மெட்ரோ ெரயிலை மேலூர் வரை இயக்க வேண்டும்-மூவேந்தர் பண்பாட்டுக்கழக பேரவை தீர்மானம்
x

மதுரை மெட்ரோ ெரயிலை மேலூர் வரை இயக்க வேண்டும் என்று மூவேந்தர் பண்பாட்டுக்கழக பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மதுரை

மேலூர்,

மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக பேரவை கூட்டம் நடைபெற்றது. பேரவை தலைவர் டாக்டர் பூபதி தலைமை தாங்கினார். மாநில தலைவர் மணி, தொழில் அதிபர் பி.கே.எம்.செல்லையா, மாநில துணைத்தலைவர் மகாலிங்கம், மாநில செயலாளர் சின்னாத்தேவர் உள்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகிகளாக டாக்டர் பூபதி தலைவராகவும், செயலாளராக சிதம்பரம், பொருளாளராக முருகன் மற்றும் 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மதுரையில் தொடங்க உள்ள திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை மேலூர் வரை நீட்டிக்க வேண்டும், மேலூர் தாலுகாவில் உள்ள கிராம பெண்கள் சிரமம் இன்றி படிக்க மேலூரில் பெண்கள் அரசு கலை கல்லூரி தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்த அலங்காநல்லூரில் செயல்படாமல் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story