மதுரையில் எம்.பி. தலைமையில் நடந்த சாலைமறியலில் போலீசாருடன் தள்ளுமுள்ளு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 727 பேர் கைது


மதுரையில் எம்.பி. தலைமையில் நடந்த சாலைமறியலில் போலீசாருடன் தள்ளுமுள்ளு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 727 பேர் கைது
x

. மதுரையில் எம்.பி. தலைமையில் நடந்த சாலைமறியலில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 727 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


மதுரையில் எம்.பி. தலைமையில் நடந்த சாலைமறியலில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 727 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் எம்.பி. வெங்கடேசன் தலைமையில் ேநற்று ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ரெயில் மறியல் செய்வதற்காக பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். முன் ஏற்பாடாக போலீசார் குவிக்கப்பட்டு தடுத்தனர். எனவே ரெயில் நிலையம் முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அதானி-அம்பானிக்கு கோடிக்கணக்கில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

போராட்டக்காரர்களின் ஒரு தரப்பினர் போலீசாரின் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் பகுதிக்கு செல்ல முயற்சித்ததால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், போராட்டக்காரர் ஒருவரை தாக்கியதாக சலசலப்பு ஏற்பட்டது. உடனே வெங்கடேசன் எம்.பி. போராட்டக்காரர்களை சமாதானம் செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட அந்த கட்சியினர் 727 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 124 பேர் பெண்கள். இந்த ேபாராட்டத்தால், அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திசை திருப்புகிறது

முன்னதாக வெங்கடேசன் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சினைகளாக உருவெடுத்து உள்ளது. அதானியின் ஊழல் குறித்து மத்திய அரசு பேச வேண்டும். ஆனால் மத்திய அரசு நம்மை, இந்தியாவா? பாரதமா? என பேச வைத்து திசை திருப்பி உள்ளது, பா.ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் ஒன்று சேர வேண்டும்" என கூறினார்.

மதுரை மட்டுமின்றி மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியல் போராட்டங்களில் 1500 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 950 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 725 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த போராட்டத்தில் 566 பெண்கள் உட்பட 1,238 பேர் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story