மதுரை புதிய கலெக்டர் நியமனம்


மதுரை புதிய கலெக்டர் நியமனம்
x

மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மதுரை


மதுரை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்க இருக்கும் எம்.எஸ்.சங்கீதா, கடந்த 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி பிறந்தவர். அவரது சொந்த ஊர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமம் ஆகும். குரூப்-1 தேர்வு மூலம் தமிழக அரசு பணியில் சேர்ந்த சங்கீதா, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பணி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். ஆனார். அப்போது உயர் கல்வித்துறையில் துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூடுதல் மேலாண் இயக்குனராகவும், தொடர்ந்து தமிழக அரசின் வணிகவரித்துறையில் கூடுதல் கமிஷனராகவும்(நிர்வாக) பணிபுரிந்து வந்த சங்கீதா தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story