இரட்டை ரெயில் பாதை பணி:மதுரை-புனலூர், நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயில்கள் ரத்து


இரட்டை ரெயில் பாதை பணி:மதுரை-புனலூர், நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயில்கள் ரத்து
x

இரட்டை ரெயில் பாதை பணியால் மதுரை-புனலூர், நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

இரட்டை ரெயில் பாதை பணியால் மதுரை-புனலூர், நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இரட்டை ரெயில் பாதை பணி

நாகர்கோவில்-இரணியல், வள்ளியூர்-நாங்குநேரி வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை பணி நடப்பதையொட்டி குறிப்பிட்ட சில நாட்கள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக திருவனந்தபுரம் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை-புனலூர் ரெயில் ரத்து

(ரெயில் எண்:16729) மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், புனலூர்-மதுரை (16730) எக்ஸ்பிரஸ் ரெயில் 20, 23, 27 மற்றும் 30-ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு- நாகர்கோவில் (16605) ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19,22,26 மற்றும் 29-ந் தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது, திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-மங்களூரு (16606) ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். அதாவது நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படும்.

நாகர்கோவில்-மங்களூரு (16650) பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20, 23,27 மற்றும் 30-ந் தேதிகளில் காலை 5.40 மணிக்கு புறப்படும். அதாவது 95 நிமிடம் தாமதமாகும்.

நாகர்கோவில் ரெயில் ரத்து

நாகர்கோவில்-திருநெல்வேலி (06641) ரெயில் 25-ந் தேதியும், (06642) திருநெல்வேலி-நாகர்கோவில் ரெயில் 26-ந் தேதியும் ரத்தாகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் அந்த்யோதயா (20691) அதிவேக ரெயில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் திருநெல்வேலி- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் அந்த்யோதயா (20692) அதிவேக ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

திருநெல்வேலியில் நிறுத்தம்

திருவனந்தபுரம்-திருச்சி (22628) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக (22627) திருச்சி - திருவனந்தபுரம் ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை சென்டிரல்- நாகர்கோவில் (12689) வாராந்திர அதிவேக ரெயில் 23-ந் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவேக ரெயில் 25-ந் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

புதுச்சேரி- கன்னியாகுமரி வாராந்திர ரெயில் 26-ந் தேதி திருநெல்வேலி வரையும், கன்னியாகுமரி- புதுச்சேரி வாராந்திர ரெயில் 26-ந் தேதி திருநெல்வேலியில் இருந்தும் புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story