மதுரை ரெயில் விபத்து: இரும்பு பெட்டியில் கட்டு கட்டாக பணம் - வெளியான அதிர்ச்சி தகவல்


மதுரை ரெயில் விபத்து: இரும்பு பெட்டியில் கட்டு கட்டாக பணம் - வெளியான அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2023 1:20 PM IST (Updated: 27 Aug 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலின் உள்ளே அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை,

மதுரை அருகே நேற்று சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 25 பேர் லேசான மற்றும் பலத்த காயம் அடைந்து ரெயில்வே மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமையல் செய்வதற்காக ரெயிலின் உள்ளே அடுப்பை பற்றவைத்தபோது சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த 9 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிரிழந்தோரின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில் தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட சுற்றுலா ரெயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது பயணிகள் கொண்டுவந்த இரும்புப் பெட்டிகளில் இருந்து எரிந்த நிலையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான ரூ.500 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது வழிச் செலவிற்காக இந்த ரூபாயை ஏஜெண்டுகள் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story