மதுரை-வாடிப்பட்டி தடத்தில் சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலை- அதிகாரிகள் கண்காணிக்க பயணிகள் கோரிக்கை


மதுரை-வாடிப்பட்டி தடத்தில் சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலை- அதிகாரிகள் கண்காணிக்க பயணிகள் கோரிக்கை
x

மதுரை-வாடிப்பட்டி தடத்தில் சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலை உள்ளதால் அதிகாரிகள் கண்காணிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை


மதுரையின் மைய பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கும், கிராம புறங்களுக்கும் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கிராம புறங்களில் இருந்து காலை நேரத்தில் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் நகர் பகுதிக்கு வருகின்றனர். பின்னர் அவர்கள் மாலை நேரங்களில் தங்கள் பணிகளை முடித்து விட்டு மீண்டும் புறப்பட்டு தங்கள் கிராமங்களுக்கு செல்கின்றனர்.

இந்தநிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வாடிப்பட்டி, தேனூர் போன்ற இடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மாலையில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வேலைக்காக நகருக்கு வந்து விட்டு ஊருக்கு செல்கிறோம். ஆனால், ஒரு சில அரசு பஸ்கள் சரியான நேரத்திற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படுவதில்லை. அனைத்து பயணிகள் ஏறிய பின்னரும்கூட, பஸ்சை இயக்காமல் இருக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது மக்கள் கோரிக்கை வைத்து புகார் அளித்தால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story