மதுரை மண்டல வருங்கால வைப்புநிதி குறைதீர்ப்பு முகாம்
மதுரை மண்டல வருங்கால வைப்புநிதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது
மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் உள்ள மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடத்தப்படுகிறது. அதன்படி, வருகிற 27-ந் தேதி மேற்கண்ட மாவட்டங்களில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. எனவே, மண்டல அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தொழில்நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்கள் ஆகியோர் தங்களது புகார்களின் மீது குறைதீர்ப்பு முகாமில் நிவாரணம் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://docs.google.comforms/d/e/1FAIpQLSfUkLmE1hdMOG6Ecb-Yzo6z5vGFNK1RB7F5sS1yziuUmBi2AA/viewform என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று மண்டல கமிஷனர் அமியா காந்த் தெரிவித்துள்ளார்.