மதுரைவீரன் கோவில் திருவிழா


மதுரைவீரன் கோவில் திருவிழா
x

மதுரைவீரன் கோவில் திருவிழா நடந்தது

கரூர்

நொய்யல்,

கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் மதுரைவீரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா பூச்சாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கு புனித நீராடினர். பின்னர் கோவில் சாமி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சாமி வேலுடன் பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளையம்மாள், பொம்மி, மதுரைவீரன் ஆகிய சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மதுரைவீரன் சாமி முன்பு பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story