மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்


மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்
x

மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல்பட்டி கிராமத்தில் மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் வைத்து பூைஜ செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story