மகா சண்டி ஹோமம்
சாயல்குடி அருகே அய்யனார் காமாட்சி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தில் பூரண புஷ்பகலா பொற்கொடி அம்பிகை சமேத பிரமாண்ட அய்யனார் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி பஞ்சகவ்யம், சங்கு பூஜை, தேவி மகாத்மா பாராயணம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. நேற்று மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி, சுமங்கலி பூஜை, மகா சண்டி ஹோமம்,2-ம் கால மகா பூர்ணாகுதி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கடலாடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story