உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்


உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாதானம் முத்துமாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆடி கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவின் போது 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் மகா சண்டி ஹோமம் நடந்தது. முன்னதாக வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க ஹோமம் செய்யப்பட்டு ஹோம குண்டத்தில் பல்வேறு வகையான வேதிகை பொருட்கள் இடப்பட்டு மந்திரங்கள் உற்சாடனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கம், வெள்ளி, பட்டு வஸ்திரங்கள் இட்டு பூர்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story