பாலாற்றுக்கு மகா தீபாராதனை சக்திஅம்மா பங்கேற்பு


பாலாற்றுக்கு மகா தீபாராதனை சக்திஅம்மா பங்கேற்பு
x

பாலாற்றுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சக்தி அம்மா பங்கேற்றார்.

வேலூர்

வேலூரில் ஸ்ரீநாராயண பீடம் மற்றும் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடைபெற்று வருகிறது.

2-வது நாள் வேலூர் செல்லியம்மன் கோவில் அருகே பாலாற்றில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா கலந்துகொண்டு, பாலாற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்தார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. 7 நதிகளை குறிக்கும் வகையில் 7 மகாதீபாராதனை பாலாற்றுக்கு காண்பிக்கப்பட்டது. பூக்கள் மூலம் அபிஷேகமும் நடந்தது. இதில் நாராயணி பீட மேலாளர் சம்பத், ஆதினங்கள், சந்நியாசிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் பலர் பாலாறு அன்னையை தரிசனம் செய்து, ஆற்றில் தீபமிட்டு வழிபட்டனர்.

இந்த விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story