வேலூரில் மகா கங்கா ஆரத்தி
உலக மக்கள் நலம் பெற வேண்டி வேலூரில் மகா கங்கா ஆரத்தி நடைபெற்றது.
வேலூர்
பாலாற்று பெருவிழாவை முன்னிட்டு உலக சைவ பெருநெறி வாழ் திருக்கூட்டம், வேலூர் கோட்டை மலை பிரணவகிரி அகத்தீஸ்வரர் திருக்கூட்டம் சார்பில் உலக மக்கள் நலம் பெற வேண்டி வேலூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள பாலாற்றங்கரையில் மணல் லிங்கேஸ்வரர் பூஜை மற்றும் காசி மகா கங்கா ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. இதில் வள்ளிமலை ஆதீனம், கோட்டை வராகி, சிவனடியார்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செல்லியம்மன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் அம்மையப்பர் வேள்வி பூஜை, சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் ஆகியவை நடைபெற்றது.
Related Tags :
Next Story