ஆரணி அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்


ஆரணி அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
x

ஆரணி அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் முத்தாலம்மன் கோவில் திடல் அருகாமையில் விநாயகர் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் கிராம பொதுமக்களும், இளைஞர்களும் இணைந்து புதிதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலை கட்டியுள்ளனர்.அந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் 2 யாக மேடை, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 கலசங்களில் புனித நீர் நிரப்பி ஹரி சிவாச்சாரியார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க 3 கால யாக பூஜைகளை நடத்தினர். பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை நாதஸ்வர வாத்தியங்களுடன் கோவிலை வலம் வந்து கருவறை கோபுரத்திலும், சுப்பிரமணிய சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கு சற்று முன்பாக வானில் 4 கருடங்கள் வட்டமிட்டு பறந்தன. அப்போது அரோகரா என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பொதுமக்கள், பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர். அப்போது சில பக்தர்கள் அருள் வந்து அருளாசி வழங்கினர்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அன்னதானமும் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை இளைஞர்கள், விழா குழுவினர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story