மகா மாரியம்மன் கோவில் திருவிழா


மகா மாரியம்மன் கோவில் திருவிழா
x

மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கரூர்

குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து, பால்குடம், தீர்த்த குடம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், கரும்புத்தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் கோவிலின் அருகே தீமிதி திருவிழா நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் தலையில் கரகத்தை எடுத்துக்கொண்டு தீமிதித்தனர். தொடர்ந்து கிடா வெட்டுதல், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story