மகா மாரியம்மன் கோவில் சப்பர திருவிழா
குத்தாலம் மகா மாரியம்மன் கோவில் சப்பர திருவிழா
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொடியேற்றுதல், அம்பாள் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர திருவிழா நடந்தது. முன்னதாக மகா மாரியம்மன் வண்ண குருத்தோலையினால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சப்பரம் வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story