மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்தி அழைப்பு மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அய்யனார், கருப்பையா, ஆகாஷ்துரை மற்றும் மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து மங்கல இசையுடன் மாரியம்மன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்ெதாடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரை ஊரின் முக்கிய வீதிகளில் வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் கோவிலை தேர் சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.


Next Story