மகா பிரத்தியங்கராதேவி பூஜை


மகா பிரத்தியங்கராதேவி பூஜை
x
தினத்தந்தி 28 Jun 2022 9:23 PM IST (Updated: 28 Jun 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி அருகே அமாவாசையொட்டி மகா பிரத்தியங்கரா தேவி பூஜை நடந்தது.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு ஆனிமாத அமாவாசையையொட்டி மகா பிரத்தியங்கராதேவி பூஜை நடந்தது. இதனை மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினர். பூஜையில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக. கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் நடைபெற்றது.


Related Tags :
Next Story