வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா


வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
x

வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

வேலூர்

திருவலம்

வில்வநாதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

காட்பாடி தாலுகா திருவலத்தில் உள்ள வில்வநாதீஸ்வரர் உடனுறை அனுமத்யம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 6 கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் வில்வநாதீஸ்வரர் சமேத தனுமத்யம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையொட்டி மாலை 6 மணியளவில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், திருவாசகம் பாராயணம் மற்றும் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதேபோல் கீரைசாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த ஏலவார்குழலி உடனுறை வரபுரீஸ்வரர் சிவன் கோவிலும் மகாசிவராத்திரி தினத்தையொட்டி 6 கால பூஜைகள் நடைபெற்றது.

இதில் 10 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.Next Story