சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா


சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா
x

மாவட்டத்தில் உள்ள ேகாவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

மாவட்டத்தில் உள்ள ேகாவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சுவாமி மற்றும் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இந்த பூஜைகளில் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

மேலும் ராஜபாளையத்தில் ஜீவ சமாது ஐக்கிய ஆலயங்களான கருப்பஞானியார், பொன்னப்பஞானியார், சிவகாமி ஞானியார், குருசாமி, கொம்புச்சாமி, குருநாதன், அருணாச்சலம் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

சொக்கநாதன் புத்தூரில் உள்ள தவநந்தி கண்டீஸ்வரர், சேத்தூரில் உள்ள திருக்கண்ணீஸ்வரர், நகரில் உள்ள பொன்மாடசாமி, அருணாச்சலேஸ்வரர், மாயூரநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பெரிய மாரியம்மன், சிங்கத்திருளப்பசாமி, பத்திரகாளியம்மன், புத்தூரில் உள்ள கருப்பசாமி, கலுசுலிங்க அய்யனார் மற்றும் தளவாய்புரம், முகவூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

குலதெய்வ கோவில்கள்

சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாகபாளையம் கரையடி கருப்பசாமி கோவிலில் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் சங்கரமூர்த்தி பட்டி நல்லதம்பி கோவில், கண்மாய்பட்டி தலக்குடையார் அய்யனார் கோவில், கோவிலூர் செந்தட்டி அய்யனார் கோவில், தென்கரை வீரணசாமி கோவில், வி.புதூர் பொன் இருளப்பசாமி கோவில், கீழராஜகுலராமன் எரிச்சிஸ்வரர் கோவில், பொன் இருளப்பசாமி கோவில் அனந்தம்மாள் கோவில் அக்கம்மாள் கோவில், அய்யம்மாள் கோவில், அழகு சொக்கு அய்யனார் கோவில், சப்பானி முத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

சாத்தூர்

சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு தங்களது குல தெய்வங்களை வழிபட்டனர்.

வேப்பிலைபட்டி, சிந்தப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

வெம்பக்கோட்டை

அதேபோல வெம்பக்கோட்டையில் உள்ள கொத்தளத்த சுவாமி கோவிலில் மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலுக்குள் குடத்தின் விளிம்பில் எவ்வித பிடிமானம் இல்லாமல் கத்தியை நிறுத்தி சக்தி நிறுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏழாயிரம் பண்ணையில் இருளப்ப சுவாமி கோவில், சப்பாணி சாமி, லாடசன்னாசி, கீழ செல்லையாபுரத்தில் தேசியம்மாள் கோவில், சுந்தாளம்மன் கோவில், சிப்பி பாறையில் ராமபுலி அய்யனார் கோவில், மீனாட்சிபுரத்தில் வாழிஞ்சி அய்யனார் கோவில், கணஞ்சாம்பட்டியில் கண்ணியம்மாள் கோவில், தாயில்பட்டியில் கன்னிமார் குருசாமி கோவில், கழுவுடை அம்மன் கோவில் உள்ளிட்ட குல தெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story