கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு... திரை பிரபலங்கள் பங்கேற்பு


கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு... திரை பிரபலங்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 March 2024 11:42 PM IST (Updated: 9 March 2024 6:03 AM IST)
t-max-icont-min-icon

நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத், பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சத்குரு முன்னிலையில் நாளை காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக ஈஷா யோகா மையத்தில் பல்வேறு சிற்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவியும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். மேலும், நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத், பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் சிவன் பாடல் ஒன்றுக்கு ஜக்கி வாசுதேவ் துள்ளிக்குதித்து நடனமாடினார். ஏராளமான மக்களும் உற்சாகத்துடன் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

1 More update

Next Story